வியாபாரியை தாக்கிய போதை ஆசாமிகள் விவகாரம்... "நீங்க வாங்க நாங்க பாதுகாப்பு கொடுக்கிறோம்.." - நம்பிக்கை அளித்த போலீசார், வியாபாரிகள் சங்கம்

x
  • கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்கோலம் பஜார் வீதியில் அமைந்துள்ள முத்துராமலிங்கம் என்பவரின் கடைக்குள் புகுந்த கஞ்சா ஆசாமி ஒருவர், அங்கு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
  • இது குறித்து காவல்துறையில் புகாரளித்த பின்பும், அதே கஞ்சா போதை ஆசாமி அடுத்த நாளும் வந்து தகராறு செய்ததாகத் தெரிகிறது.
  • இதற்கான சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் புகார் கடிதத்துடன் போலீசில் அணுகிய போதும் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி முத்துராமலிங்கம் "கஞ்சா போதையில் உலாவரும் ரவுடிகளால் இந்த கடை காலவரையின்றி மூடப்பட்டது" என்ற நோட்டீசை ஒட்டி கடையை மூடி விட்டு சொந்த ஊர் சென்று விட்டார்.
  • தக்கோலம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினரும், காவல்துறையினரும் முத்துராமலிங்கத்தைத் தொடர்பு கொண்டு நம்பிக்கை தரவே, அவர் மீண்டும் கடையைத் திறக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
  • தக்கோலத்தில் தற்போது கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், கஞ்சா வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடையில் தகராறு செய்த நபரைத் தேடி வருவதாகவும் தெரிவித்த காவல்துறையினர் தக்கோலத்தில் கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்