ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை விதித்த விவகாரம் - காங்கிரஸ் நிர்வாகி ஆவேச பேச்சு..

x


ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை விதித்த நீதிபதியின் நாக்கை அறுப்போம் எனக்கூறிய திண்டுக்கல் காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டதை கண்டித்து, கடந்த 6ம் தேதி, திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில், காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச். வர்மாவின் நாக்கை அறுப்போம் என ஆவேசமாக பேசினார். இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்குப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், துரை மணிகண்டனை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்