"எல்லாரும் ஏரோபிளேன் டிராவலோ..!" மத்திய அரசு சொன்ன தகவல்

x
  • கொரோனா பாதிப்புகள் முடிவடைந்த பின், உள்நாட்டு விமானப் போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.
  • ஏப்ரல் 30 அன்று 2 ஆயிரத்து 978 விமானப் பயணங்களில், மொத்தம் 4 லட்சத்து 56 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.
  • கொரோனாவிற்கு முந்தைய, தினசரி விமானப் பயணிகளின் அதிகபட்ச அளவை இது தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ஏப்ரல் 30இல் வெளிநாட்டு விமானப் பயணங்களையும் சேர்த்து மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 336 பேர் பயணம் செய்துள்ளனர்.
  • விரைவில் தினசரி உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டும் என்று துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • விமான இருக்கைகள் நிரப்பப்படும் விகிதத்தில் 96 சதவீதத்துடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது.
  • கோ ஃபஸ்ட்டில் இது 95 சதவீதமாகவும், விஸ்தாராவில் 93 சதவீதமாகவும், ஏர் இந்தியாவில் 92 சதவீதமாகவும் இருந்தது.

Next Story

மேலும் செய்திகள்