ரஷ்யாவுடன் திடீர் பயிற்சியில்... இறங்கிய இந்திய ராணுவம்

x

பெலாரஸ் மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட இந்தியாவும் சீனாவும் படைகளை ரஷ்யா அனுப்ப உள்ளன... சீன மற்றும் ரஷ்ய ராணுவத்திற்கு இடையேயான வருடாந்திர ஒத்துழைப்பு திட்டத்தின்படி, ரஷ்யாவில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறவுள்ள வோஸ்டாக்-2022 ராணுவ பயிற்சியில், தங்கள் படைகளை அனுப்ப உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இந்தியா, பெலாரஸ், தஜிகிஸ்தான், மங்கோலியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த பயிற்சியில் ஈடுபட உள்ளன. மேலும், இந்த ராணுவ பயிற்சிக்கும் உக்ரைன்-ரஷ்யா போருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்