விளையாட்டே விபரீதமானது - 3 வயது சிறுமி உயிரிழப்பு

x

ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் குழாயை தாண்ட முயன்ற சிறுமி தடுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கீழமஞ்சிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரது 3 வயது மகள், வீட்டிற்கு வெளியே தெருவில் மற்ற குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்துள்ளார். தெருவில் போடப்பட்டு இருந்த குடிநீர் குழாயை தாண்டிச்செல்ல முயன்ற போது தடுக்கி விழுந்ததில் சிறுமியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுமி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்