கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம்.. டிப் டாப்பாக இருந்த மாப்பிள்ளை செய்த காரியம்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் மச்சானுக்கு துணையாக சாராய விற்பனை செய்ய வந்த மாப்பிள்ளையையும் போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை கொட்டப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான சரவணன். இவர் கச்சிராயபாளையம் கிராமத்தில்

சாராயம் விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் ஆய்வாளர் ஸ்ரீ பெரியார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, சரவணன் உடன் அவரது மச்சானான மற்றொரு சரவணன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். ஒருவர் லுங்கியிலும், மற்றொருவர் பேண்ட் சட்டை அணிந்த =படி டிப்டாப்பாக இருந்ததே போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. சகோதரி வீட்டிற்கு வந்த மச்சானுக்கு உதவுவதற்காக சாராயம் விற்பனை வந்த போது மாப்பிள்ளையும் போலீசாரிடம் வசமாக சிக்கினார். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்