"கடலுக்கு சென்ற கணவர் கரை திரும்பவில்லை" - மீனவரின் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை

x

"கடலுக்கு சென்ற கணவர் கரை திரும்பவில்லை" - மீனவரின் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை | Fishermen

பக்ரைனில் மீன்பிடிக்க சென்றபோது மாயமான 2 குமரி மீனவர்களை கண்டுபிடித்து தர கோரி அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கடியபட்டணத்தை சேர்ந்த சகாய செல்சோ மற்றும் ஆண்டனி வின்சென்ட் ஆகியோர் பக்ரைனை சேர்ந்த தராக் மாஜித் என்பவரின் படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். ஆக்டோபர் 17 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற இருவரும் கரை திரும்பாததால், அவர்களை கண்டுபிடித்து தரக்கோரி அவர்களது உறவினர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்