காதல் மனைவியை அம்மிக்கல்லால்.. அடித்தே கொன்ற கணவன் - தனியாய் தவிக்கும் இரண்டு பச்சிளம் குழந்தைகள்

x

காதல் மனைவியை அம்மிக்கல்லால்.. அடித்தே கொன்ற கணவன் - தனியாய் தவிக்கும் இரண்டு பச்சிளம் குழந்தைகள்

கன்னியாகுமரியில் கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் அருகே பள்ளி விளை பகுதியை சேர்ந்த தம்பதியர் ஆண்டனி வெனிஸ்டர் மற்றும் பத்மா. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இத்தம்பதியர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். . இதையடுத்து ஆண்டனி வெனிஸ்டர் பத்மாவிடம் சென்று சமரசம் பேச மீண்டும் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், தன் கணவனுக்கு மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது பத்மாவுக்கு தெரிய வரவே, இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு எழுந்துள்ளது. இதனால் கோபமடைந்த ஆண்டனி, பத்மாவின் தலையில் அம்மியால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான ஆண்டனியை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்