நொடிப்பொழுதில் சரிந்த பிரமாண்ட சுவர் - கண்ணெதிரே துடிதுடித்த 5 உயிர்கள்... பிழைப்பு தேடி வந்து உயிரை விட்ட சோகம்

x

கோவையில், கல் லூரி பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து, கட்டுமான தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், குனியமுத்தூர் அடுத்த மைல்கல் பகுதியில், கிருஷ்ணா கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது.

இந்தக் கல்லூரியினை சுற்றி பிரம்மாண்ட சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வழக்கம்போல கட்டுமான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த வெளி மாநில தொழிலாளர்கள் 6 பேர் சிக்கினர். இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொது மக்களுடன் இணைந்து மீட்பு பணியை துரிதமாக மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கிய 2 தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இடுபாடுகளில் சிக்கிய 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

"சுற்றுச்சுவர் கீழே சரிந்து விழுந்தது"

"மண்ணில் புதைந்தவர்கள் உயரிழந்துவிட்டனர்"

உயிரிழந்தவர்கள் ஆந்திராவை சேர்ந்த கண்ணையன், ஜெகநாதன், சச்சிம், மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்த பிபில்போயால் மற்றும் பரூன்கோஸ் என்பதும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில், ஒப்பந்ததாரர் சீனிவாசன் என்பவர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சம்பவ இடத்தில் கோவை தெற்கு காவல் உதவி ஆணையர் ரகுபதிராஜா, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

"இதுவரை கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை"

"ஒப்பந்ததாரரே பொறுப்பு என கல்லூரி உரிமையாளர் சொல்கிறார்"

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, கிருஷ்ணா கல்லூரியில் ஏற்கனவே இருந்த சிறிய பக்கவாட்டு சுவரையொட்டி, புதிதாக 10 அடி உயரம் கொண்ட பக்கவாட்டு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பழைய சுவர் திடீரென தொழிலாளர்கள் மீது இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்