தூக்கில் தொங்கிய ஹாஸ்டல் நண்பன்...பதறி அலறிய சக மாணவர்...எல்லாம் போச்சு | Tiruchy | Student

x

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த 29 வயதான இளஞ்சூரியன் என்ற மருத்துவ மாணவர், திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து, 3-ம் ஆண்டு எம்.எஸ். படித்து வந்தார். இந்த நிலையில், இளஞ்சூரியன் அவரது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அவரது நண்பர் அப்சல் அதிர்ச்சி அடைந்து சக மாணவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாணவரின் இறப்பு, சக மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்