போட்டி நடத்தும் கத்தார் அணியே வெளியேற்றம்.. இங்கிலாந்து- அமெரிக்கா இடையே மோதல் - விறுவிறுப்பான உலகக்கோப்பை கால்பந்து தொடர்

x

உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் அணி 2-வது லீக் ஆட்டத்தில் செனக்கல் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 1க்கு 3 என்ற கோல் கணக்கில் கத்தார் தோல்வியடைந்தது. அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியடைந்த கத்தார் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. லீக் ஆட்டத்தில் வரும் செவ்வாய்கிழமை நெதர்லாந்து அணியை கத்தார் எதிர்கொள்கிறது. ஏற்கனவே 2 ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் கத்தார் அணி உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. போட்டியை நடத்தும் கத்தார் அணி லீக் சுற்றிலேயே தொடரில் இருந்து வெளியேறிய நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்