ஷ்ரத்தா கொலையில் வெளிவரும் பயங்கரம் போலீசாரிடம் சிக்கிய எலும்புகள் - அஃப்தாப் சொன்ன அடுத்த அதிர்ச்சி

x

டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில், மெஹ்ராலி காட்டில் இருந்து மனித பாகங்களை போலீசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மண்டை ஓட்டின் அடிப்பகுதி, தலை துண்டிக்கப்பட்ட தாடை மற்றும் பல எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவை அனைத்தும், ஷ்ரத்தா தந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஷ்ரத்தாவின் துண்டாக்கப்பட்ட தலைப் பகுதியை, ஒரு குளத்தில் வீசியதாக அஃப்தாப் விசாரணைக் குழுவிடம் கூறிய நிலையில், அதனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்