சித்தி ரூபத்தில் வந்த 'கொடூர பேய்'... சிறுமியை துடிதுடிக்க கொன்ற கொடூரம்... தந்தையே துணைபோன கொடுமை - சோளிங்கரில் அரங்கேறிய அதிர்ச்சி

x

கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையை, 2வது மனைவி தலையணையால் மூச்சை அடக்கி கொன்ற சம்பவம் ராணிப்பேட்டையில் அரங்கேறியுள்ளது.

சோளிங்கர் பகுதியில் வசித்து வரும் ராணுவ வீரர் சந்திரசேகர் என்பவருக்கு, சுமதி என்ற பெண்ணுடன் திருமணமாகிய நிலையில், கடந்த 2016ம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்த இரு மாதங்களில் உடல்நலக்குறைவால் சுமதி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ராதிகா என்ற பெண்ணை, சந்திரசேகர் 2வதாக திருமணம் செய்தார். இதனிடையே, சந்திரசேகரின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை, கடந்த ஆண்டு மே மாதம் மயக்கம் ஏற்பட்டதாகக் கூறி, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில், ஓராண்டுக்குப் பின் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளன. அதில், தலையணை வைத்து அமுக்கியதால் மூச்சு திணறி சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராதிகாவையும், உண்மை தெரிந்தும் வெளியே கூறாமல் மறைத்து நாடகமாடிய அவரது கணவர் சந்திரசேகரனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்