கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு.. சென்னைவாசிகளை வதைத்த வெயில் - அடேங்கப்பா.. இத்தனை டிகிரியா?

x

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 17 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

தமிழகத்தில் கத்திரி வெயில் நிறைவு பெற்ற பின்னரும் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று(ஜூன்3), தமிழகத்தில் சென்னை, வேலூர், திருத்தணி, மதுரை உள்ளிட்ட 17 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்த‌து. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், வேலூர், திருத்தணியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த ஜூன் மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 108 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது குறிபிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்