போலீசை பார்த்து பைக்கை தள்ளிச்சென்ற 2k கிட்ஸ் - சந்தேகப்பட்டு பிடித்த போலீசாருக்கு ஷாக்!

x

சென்னை ராயபுரம் சிக்னல் அருகே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது 3 பேர் விலை உயர்ந்த பைக்கில் வந்துள்ளனர்... போலீசாரைக் கண்டதும் அவர்களில் ஒருவர் மட்டும் இருசக்கர வாகனத்தைத் தள்ளிக் கொண்டே ஓடியுள்ளார்... ஒருவேளை திருட்டு வாகனமாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், பின் தொடர்ந்து சென்று துரத்திப் பிடித்த காவலர்கள் விசாரித்த போது அவர் ராஜேஷ் என்பதும், நன்கு குடித்திருந்ததும் கண்டறியப்பட்டது. ஆல்கஹால் ப்ரீத் அனலைசரில் 117 சதவீதம் காட்டியதைக் கண்டு காவலர்களே அதிர்ந்து போயினர்... இதையடுத்து ராஜேசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்