தாய்க்காக ஓடி ஓடி கடலை விற்கும் தங்கமகன்.."காப்பு,செயின் வாங்கி கொடுக்கணும்" - உருக வைத்த சிறுவன்

x

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்" என்பது வள்ளுவரின் வாக்கு.... தனது மகனை சுற்றத்தார் நற்பண்பு மிக்கவன் என கூறும்போது, அவனை பெற்றெடுத்த காலத்தை காட்டிலும் அவளது தாய் அதிகமாக மகிழ்ச்சி அடைவாள் என்பது இதன் விளக்கம்... இந்த குறளுக்கு உதாரணமாக தனது தாயின் சுமையை தனது தோளில் சுமந்து உருக வைத்துள்ளான் சாய்சரண் என்ற ஏழு வயது சிறுவன்....

திருவாரூரை சேர்ந்த சத்யா - யுவராஜ் என்ற தம்பதியினருக்கு ஒரு மகளும், ஏழு மற்றும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தைகளும் உள்ளனர். தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடவே, யுவராஜ் மலேசியாவில் பணிபுரிந்து வரும் நிலையில், சத்யா தன் தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். பூ வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வரும் சத்யாவுக்கு, மகள் பத்மாவும், 7 வயது மகன் சாய்சரணும் உதவியாக இருந்து வருகின்றனர்.

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு, தெப்ப கட்டுமான பணிகளை காண வந்த மக்களை சாய்சரண் ஈர்த்துள்ளான். விடுமுறை நாள் என்பதால் தினமும் சைக்கிளில் சென்று கடலை விற்று, தனது தாயிடம் பணத்தை கொடுத்து விடுவேன் என பொறுப்புடன் பதில் சொல்கிறான் சாய்சரண்.

சாய்சரண், திருவாரூர்

"எனது அம்மாவிற்காக கடலை விற்று வருகிறேன்"

"கடலை விற்ற பணத்தை அம்மாவிடம் கொடுத்து விடுவேன்"

எனக்கும் மற்ற சிறுவர்களை போல் விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது.... ஆனால் அம்மாவுக்காக கடலை விற்கிறேன் என்றும், எதிர்காலத்தில் காவல்துறை அதிகாரியாக வர வேண்டும் எனவும் அந்த சிறுவன் தன் மழலைக்குரலில் பேசியதை கேட்கும் எவருக்கும் மனம் உருகத்தான் செய்யும்.


Next Story

மேலும் செய்திகள்