சிறுமி மரண விவகாரம் -"15 நாட்களில் 2 பேர்.." தனியார் மருத்துவமனை குறித்து வெளியான அடுத்த அதிர்ச்சி

x

சென்னையில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், கடந்த 15 நாட்களில் முறையான சிகிச்சை அளிக்காமல் 2 பேர் இறந்துள்ளதாக தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த அமானுல்லா என்பவரின் 24 வயது மகன் அப்துல் அமீது அப்பாஸ், கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி கடுமையான வயிற்று வலி காரணமாக மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பாஸை சோதனை செய்த மருத்துவர் பெரிய அளவில் பிரச்சினை இல்லை எனக் கூறியுள்ளார். ஆனால், அடுத்தநாள் அதிகாலை ஐசியுவில் சேர்க்கப்பட்ட அப்பாஸிற்கு, தொண்டை பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி அப்பாஸ் உயிரிழந்தார். இந்த நிலையில், தற்போது 15 வயது சிறுமி அதே மருத்துவமனையில் உயிரிழந்தது விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, தனது மகனின் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த அப்பாஸின் தந்தை அமானுல்லா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்