காதலனை இரவில் வீட்டிற்கு அழைத்த காதலி... வீட்டை சுத்துப்போட்ட கிராம மக்கள் - காதலனை காப்பாற்றி உயிரை விட்ட காதலி

x

திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே காதலியை பார்க்க வந்த காதலன் ஊர் மக்களிடம் சிக்கியதால், அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், வாத்தலை பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணும், தொட்டியம் பகுதியை சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இரவு நேரத்தில் காதலனை பார்க்க விரும்பிய அந்த பெண், தனது வீட்டிற்கு வரும்படி செல்போனில் அழைத்துள்ளார். இதையடுத்து, அந்த இளைஞர் காதலி வீட்டிற்கு சென்றபோது, கிராம மக்கள் திருடன் என நினைத்து அவரை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். காதலன் அகப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண், ஊர் மக்களிடம் உண்மையை சொல்லி காதலனை விடுவித்துள்ளார். இந்நிலையில், நீண்ட நேரம் ஆகியும் இளம் பெண் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது, படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவமானம் தாங்காமல் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்