நண்பருடன் புகைப்பிடித்துக் கொண்டிருந்த பெண்... வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்

பெங்களூரு கோ பகுதியில் உள்ள பூங்காவில், 19 வயதுடைய பெண், கடந்த 25ஆம் தேதி இரவு அவரது நண்பருடன் அமர்ந்து புகைப்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். பின்னர் தனது நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து வரவழைத்த அந்த இளைஞர், அந்தப் பெண்ணை காரில் கடத்திச் சென்றுள்ளனர். அத்திபெலே, ஓசூர் பகுதியை ஒட்டிய புறவழிச் சாலையில் வைத்து, பெண்ணை 4 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்த அந்தப் பெண், நடந்த சம்பவங்களை தெரிவிக்க, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 4 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com