ரயிலில் வித்தியாசமாக வாழைப்பழம் சாப்பிட்ட பெண்.. மிரண்டுபோன சகப்பயணிகள்

x

சீனாவின் ரயிலில் பயணித்த ஒரு பெண், தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டு, வாழைப்பழத்தை சாப்பிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, ரயிலில் பயணிக்கும் போதும், பொது இடங்களிலும் மக்கள் எதையும் சாப்பிட கூடாது என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், ரயிலில் பயணித்த ஒரு பெண், வாழைப்பழத்தை சாப்பிடுவதால், தொற்று பரவாமல் இருக்கும் உத்தரவை மீறாமல் இருக்கவும், தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டுள்ளார்.

இவர் முகத்தை மூடிக்கொண்டு பழத்தை சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்