மனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தராக மாற்றிய கும்பல் - உண்டியல் வைத்து பணம் வசூல் | Karur | Siddha

x

மனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தராக மாற்றிய கும்பல் - உண்டியல் வைத்து பணம் வசூல்

கரூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபரை சித்தர் என நம்பவைத்து ஒரு கும்பல் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

அரவக்குறிச்சி அடுத்த மலைக்கோவிலுார் பகுதியில் சுப்பிரமணி என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு, நெடுஞ்சாலையோரம் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியை சேர்ந்த சிலர் அவரை 'நெடுஞ்சாலை சித்தர்' என்ற பெயரில் சாமியாராக மாற்றி கொட்டகை அமைத்து தங்க வைத்துள்ளனர். எந்த துணியும் இல்லாமல் உடல் முழுவதும் விபூதியை பூசி அவர் அருகே உண்டியலை வைத்து வசூல் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி வரும் தன்னார்வலர்கள், அவரை பார்க்க வருவோர் காணிக்கை எதுவும் வழங்க வேண்டாம் என பதாகையை வைத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்