சாதி ரீதியாக மாணவர்களை தாக்கிய கும்பல்?பள்ளிக்குள் நடந்த பரபரப்பு சம்பவம் | Vilupuram | Gingee

x

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சாதி ரீதியாக அரசு பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சி அடுத்த நெகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களில் இரு தரப்புக்கிடையே சில நாள்களாக மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதில், நான்கு மாணவர்களை, நெகனூர் ஊராட்சி மன்றதலைவர் ஜெய்சங்கர் சம்பவத்தன்று காலையில் மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் மற்றும் கவுன்சிலர் பிரபாகரனின் தூண்டுதலின் பெயரில் பத்துக்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தினுள் புகுந்து உதவி தலைமையாசிரியர் முன்னிலையில், மாணவர்கள் நால்வரை சாதி ரீதியாக திட்டி, தாக்கியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்