கேஷ்பேக் வந்ததாக கூறி போலீசிடமே மோசடி செய்த கும்பல்... ஒரே ஒரு LINK.. ரூ.2 லட்சம் அபேஸ்

x

ஃபோன்பே கேஷ்பேக் சலுகை வென்றதாக‌க் கூறி டெல்லியில் காவல்துறை அதிகாரியிடம் இருந்து 2 லட்சம் ரூபாயை திருடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு, அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போது, ஃபோன்பே மூலம் பணப் பரிவர்த்தனை செய்த‌தற்காக கேஷ்பேக் ஆஃபர் வென்றதாக‌வும், ஆஃபரை பெறுவதற்கு வேறு ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால், காவல்துறை அதிகாரியும், அந்த செயலியை செல்போனில் பதவிறக்கம் செய்துள்ளார். அதன்பின்னர், அவரது வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டில் இருந்து 2 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது தெரிய வந்த‌து. விசாரணையில், புதிதான பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி மூலம், செல்போனை ஹேக் செய்து, அதன் மூலம் பணத்தை கொள்ளையடித்த‌து தெரிய வந்த‌து. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்