"கும்பலா வந்து வண்டிய எடுத்துட்டு ஓடிட்டான்.." - ஆவின் செக்யூரிட்டி அதிகாரி பரபரப்பு பேட்டி

x

ஆவின் நிறுவனத்தில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கிய விவகாரம் தொடர்பாக, அந்த நிர்வாகம் சார்பில், சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து முகவர்களுக்கு பால் விநியோகிக்கும் வாகனங்களில் TN 23 AC 1352 என்ற ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வாகனத்தை ஆவின் அதிகாரிகளால் பறிமுதல் செய்து வைத்திருந்தனர். இந்த வாகனத்தை விக்கி என்ற நபர் கும்பலோடு வந்து, காவலாளியை மிரட்டி விட்டு எடுத்து சென்றதாக, ஆவின் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்