பைக்கோடு கடக்கும் போதே பாய்ந்து வந்த வெள்ளம்.. சிக்கி திணறிய நபர்

x

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள சக்கரைப் பள்ளம் காட்டாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது மலை கிராமவாசி ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் காட்டாற்றை கடந்து செல்ல முயற்சித்தபோது திடீரென இரு சக்கர வாகனம் வெள்ள நீரில் சிக்கி நகர முடியாமல் நின்றது. அப்போது அவ்வழியே வந்த மலை கிராம இளைஞர்கள் காட்டாற்று வெள்ளத்தில் இறங்கி இருசக்கர வாகனத்துடன் சிக்கி தவித்தவரை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்