இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டெஸ்ட் போட்டி..இன்றும் இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா ?
டொமினிகாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்கள் எடுத்தது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. சிறப்பாக விளையாடிய அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித் சர்மா இருவரும் சதம் விளாசினர். பின்பு ரோகித் சர்மா 103 ரன்களுக்கும், சுப்மன் கில் 6 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், கோலி 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி வெஸ்ட் இண்டீசை விட 162 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
