வந்தாச்சு முதல் பறக்கும் கார்..! மூக்கின் மேல் விரல் வைத்த உலகம் - எவ்வளவு வேகம்? டீசலா? பெட்ரோலா?

x

உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் பறக்கும் காருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது, இது குறித்து பார்க்கலாம்.

பெருகி வரும் மக்கள் தொகை..... நேரத்தை வீணடிக்கும் ட்ராபிக்கால்... போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பு... போன்ற கவலைகள் இனி வேண்டவே வேண்டாம்! என்கின்றனர், உலக நாடுகள்.

ஆம்... சாலையில் செல்லும் கார்கள்... டிராபிக்கில் மாட்டிக்கொள்ளாமல்... வானத்தில் பறந்து செல்லவும் முடியும் என்றால் ஆச்சரியம் தானே!

துபாய்.. நெதர்லாந்து.. அமெரிக்கா என பல நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு பறக்கும் கார்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர களமிறங்கி விட்டன.

'தி மேன் வித் தி கோல்டன் கன்' என்ற ஜேம்ஸ் பாண்ட் படம் ஞாபகம் இருக்கிறதா?... இப்படி இதுவரை நாம் கார்ட்டூன்களிலும்... ஹாலிவுட் படங்களிலும் பார்த்து வந்த காட்சி விரைவில் நிஜமாக இருக்கிறது.

இதுவரை பெரும்பாலும் ஹெலிகாப்டர் மாடலிலே பறக்கும் கார்களை அறிமுகம் செய்ய முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில்... இனி வரும் காலத்தில் வானம் முழுக்க ஃபார்முலா 1 ரக கார்கள் பறப்பதை பார்க்கலாம்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்... பறக்கும் காரை மக்களுக்கு அறிமுகம் செய்த கலிபோர்னியாவைச் சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் என்ற நிறுவனம்... இம்முறை அமெரிக்க சாலைகளில் மட்டும் இன்றி வான் வழியிலும் தங்களின் கார் பறக்க அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனிடம் முதல் ஆளாக சட்டபூர்வ அனுமதியை பெற்று, உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பி இருக்கிறது.

மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னதாகவே... சுமார் 440 பேர் இந்தக் காரை வாங்குவதற்கு முன்பதிவு செய்து இருக்கிறார்கள் என்பதன் மூலம் மக்களிடம் பறக்கும் கார்களுக்கு உள்ள அதீத வரவேற்பை நாம் அறிந்து கொள்ளலாம்..

அதுவும் முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கக்கூடிய இந்த காரின் விலை நம்ம ஊரு மதிப்பு படி ஜஸ்ட் ரெண்டரை கோடி தான்!

ஒருமுறை சார்ஜ் செய்து விட்டால் 177 கிலோ மீட்டர் வரை பறக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் கார்... சாலையில் மணிக்கு 25 மைல் வேகத்திற்கு மேல் செல்லாதது சிறுகுறையாக பார்க்கப்படுகிறது.

தற்போது வெறும் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் அறிமுகமாகியுள்ள இந்த காரை ,விரைவில் அதிக பயணிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்க திட்டமிட்டுள்ளது, அந்த நிறுவனம்.

வரும் 2025ம் ஆண்டு இறுதிக்குள் வாடிக்கையாளர்களுக்கு பறக்கும் கார்களை வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்