டங் ஸ்லிப்பாகி சொன்ன நிதியமைச்சர்.. குலுங்கி குலுங்கி சிரித்த எதிர்க்கட்சியினர் - வைரலாகும் 'Political' வீடியோ..!

x

பட்ஜெட் தொடர்பாக சீரியஸாக உரையாற்றி கொண்டிருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாய் தவறி கூறிய வார்த்தையால் அவையில் சிரிப்பலை எழுந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மத்திய அரசு துறைகளில் பழைய வாகனங்களை அழிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அவர், Old Polluted Vehicles என்று சொல்வதற்கு பதிலாக வாய் தவறுதலாக Old Political Vehicles என்று கூறியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது. சுதாரித்து கொண்ட அமைச்சர் மன்னிப்பு கோரிவிட்டு, பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்