அனல் பறந்த சேவல் சண்டை.. அதிரடி காட்டிய போலீசார்

கோவை மாவட்டம் சூலூரில், தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நடத்தியதாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

குரும்பபாளையத்தில் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தனிப்படை போலீசார், சேவல் சண்டை நடத்திய 15 பேரை கைது செய்தனர்.

மேலும், ஐந்து சேவல்கள், ஆறு இருசக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com