பினராயி விஜயன் தொடங்கிவைத்த விழாவிற்கு தலைமுடியை அனுப்பிவைத்த பெண் இயக்குநர்

27வது திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழாவை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். டிசம்பர் 16ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில், 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, 186 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்நிலையில், ஈரானிய பெண் இயக்குநர் மஹ்னாஸ் முகமதி, இவ்விழாவில் பங்கேற்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ள நிலையில், அவரது தலைமுடியை தனது பிரதிநிதி மூலம் அனுப்பி வைத்தார். இதனிடையே, அவருக்கான விருது அவரது பிரதிநிதியிடம் அளிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com