2வது திருமணத்துக்கு துடித்த மாமனார்.. தடுத்த மருமகளை துடிதுடிக்க கொன்ற கொடூரம் -நெல்லையில் அதிர்ச்சி

x

நெல்லையில் இரண்டாவது திருமணத்துக்கு தடையாக இருந்த மருமகளை கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்தனர். நெல்லை, இட்டேரியை சேர்ந்தவர் 50 வயதான தங்கராஜ். இவரது மனைவி உயிரிழந்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்ய எண்ணியுள்ளார். இதற்காக தனது மகனான தமிழரசனுக்கு எழுதிக் கொடுத்த வீட்டை தங்கராஜ் திருப்பி கேட்ட நிலையில், மகனும், மருமகளும் தரமறுத்து எச்சரித்தாக தெரிகிறது. இந்நிலையில், அருகில் உள்ள கடைக்கு வந்த மருமகள் முத்துமாரியை தங்கராஜ் இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், தப்பியோடிய தங்கராஜை போலீசார் தேடி வந்த நிலையில், அவரை கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்