நடுக்கடலில் சாகச பிரியருக்கு நேர்ந்த கதி..3 மாதம் வெறும் பச்சை மீன் மட்டுமே..படகிலே நாயுடன் வாழ்ந்த அதிசய மனிதன்

x

பசிபிக் பெருங்கடலில் மூன்று மாதங்களாக போராடி உயிர் வாழ்ந்தவர் தனது நாயுடன் பத்திரமாக மீட்கப்பட்டு இருக்கும் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல ஹாலிவுட் படங்களை நம் கண்முன்னே நிறுத்தும் இந்த சம்பவத்தில் நடந்தது என்ன ? என்று எந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

"லைப் ஆஃப் பை" படத்தில் ஒரு புலியுடன் சிறுவன் ஒருவன் தனியாக படகில் மாட்டிக் கொள்வான் அல்லவா?

கிட்டதட்ட இங்கேயும் அதே கதை தான்.... ஆனால் புலிக்கு பதிலாக தனது செல்ல பிராணி உடன் படகில் தனியாக மாட்டிக் கொண்டிருந்திருக்கிறார், இந்த நபர்.

இதில் அதிசயம் என்னவென்றால் மூன்று மாதமும் சுறா மீன்களின் இடமிருந்து தப்பி... வெறும் சமைக்கப்படாத மீனை உண்டும்.. மழை நீரை பருகியும் இவர்கள் இருவரும் உயிர் வாழ்ந்திருப்பது தான்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிம் ஷாடாக் என்பவரும் அவரது செல்ல நாய் பெல்லாவும்.... கடந்த ஏப்ரல் மாதம் மெக்சிகோவின் La Pazல் இருந்து பசிபிக் பெருங்கடலில் உள்ள பிரெஞ்சு பாலினேசியாவுக்கு சிறுபடகில் சாகச பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள்.

கடலில் சுமார் 6000 கிலோ மீட்டர் நீண்ட பயணத்தை தொடங்கிய இவர்களுக்கு... ஆரம்பமே அதிர்ச்சி தான். பயணத்தை தொடங்கி இரண்டு வாரத்தில்.... பலத்த புயல் வீசியதால் படகில் இருந்த எலக்ட்ரானிக் கருவிகள் அனைத்தும் சேதமடைந்து விட்டன. இதனால் டிமும் அவரது செல்லப்பிராணி பெல்லாவும் வெளி உலகத்துடனான தொடர்பை முற்றிலும் இழந்திருக்கிறார்கள்.

ஆனால் தங்கள் படகில் மீன் பிடி உபகரணம் உள்ளிட்ட சில தேவையான பொருட்களை வைத்திருந்ததால்.... அதை வைத்து அவர்கள் கடலில் மீன் பிடித்து உயிர் வாழ்ந்திருக் கிறார்கள்.

இப்படியே மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலையில்.... மீன் பிடிப்பதில் ஈடுபட்டிருந்த ஒருவர் அவர்களை கடந்த ஜூலை 12ஆம் தேதி... கண்டுபிடித்து மீட்டிருக்கிறார்.

இந்த செய்தி மக்களுக்கு தெரிய வரவே... அவர்கள் டிம்மை... ரியல் லைஃப் டாம் ஹாங்க்ஸ் என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.

கூடவே இந்த சம்பவத்தை கடந்த 2000 ஆவது ஆண்டு வெளியான ஹாலிவுட் பிரபலம் டாம் ஹாங்க்ஸின் Cast away படத்துடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.

ஒரு மோசமான விமான விபத்திற்கு பிறகு ஒரு தீவில் தனித்து விடப்படும் நபர் எப்படி உயிர் பிழைக்கிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் Cast away திரைப்படம்.


Next Story

மேலும் செய்திகள்