தக்காளியால் கோடீஸ்வரரான விவசாயி..1 கோடி, 2 கோடி இல்ல.. அதுக்கும் மேல - கூரைய பிச்சிகிட்டு கொட்டிய பண மழை

x

ஒருபுறம் தாறுமாறான தக்காளி விலையால் மக்கள் தவிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், மறுபுறம் தக்காளியால் கோடீஸ்வரராகியிருக்கிறார்கள், சில விவசாயிகள். அவர்களுள் புனேவைச் சேர்ந்த விவசாய தம்பதி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு....

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக... மக்களை மலைக்க வைத்து வருகிறது, தக்காளியின் திடீர் விலை ஏற்றம். சதத்தை கடந்த தக்காளியின் விலையால் மக்கள் தவிர்ப்புக்குள்ளாகி வர... அதே தக்காளியை விற்று இன்று 2 கோடி 80 லட்ச ரூபாயை வருவாயாக ஈட்டி இருக்கிறார்கள், புனேவை சேர்ந்த இந்த விவசாய தம்பதி.

தந்தை வழியில் விவசாயத்தில் இறங்கிய ஈஸ்வர் காய்வர்.... கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தக்காளி சாகுபடி செய்து வருகிறார். அவருக்கு பக்க பலமாக அவரது மனைவி ஜுன்னர்ரும் இருந்துவருகிறார்.

முதலில் வெறும் ஒரு ஏக்கர் பரப்பளவில் மட்டும் தக்காளி விவசாயம் செய்து வந்தவர்கள்... கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தங்களிடம் உள்ள 12 ஏக்கர் நிலப்பரப்பிலும் தக்காளியை பயிரிட்டு வருகின்றனர்.

இப்படி ஏக்கர் கணக்கில் தக்காளி பயிர் செய்து வந்தாலும் .... கடந்த காலங்களில் இவர்கள் சந்தித்தது என்னவோ நஷ்டம் மட்டுமே. குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் இந்த தம்பதியருக்கு தக்காளியால் 20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி எந்த தக்காளியால் அவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிட்டதோ.... அதே தக்காளி மூலம் இன்று அடித்த ஜாக்பாட்டில்... கோடீஸ்வரர்களாகி இருக்கிறார்கள், இந்த தம்பதியர்.

இதுவரை தங்கள் தோட்டத்திலிருந்து சுமார் 17,000 பெட்டி தக்காளியை விற்றவர்கள் வருமானமாக இரண்டு கோடியே 80 லட்சம் ரூபாயை சம்பாதித்து இருக்கிறார்கள்.

ஒரு கிலோ தக்காளி இந்த சீசனில் 30 ரூபாய்க்கு விற்பனை யாகும் என்றுதான் அவர்கள் கருதி இருந்தார்கள்.... ஆனால் எதிர்பாராத தக்காளி விலை ஏற்றத்தால்... ஒரு பெட்டி தக்காளியை 770 முதல் 2, 311 ரூபாய் வரை விற்பனை செய்து வந்திருக்கிறார்கள்.

தற்போது அவர்களிடம் இன்னும் விற்பனைக்காக நான்காயிரம் பெட்டி தக்காளி இருப்பதால்... தக்காளி மூலம் மட்டும் இந்த சீசனில் மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள், இந்த தம்பதியர்.

பல நெருக்கடிகளை சந்தித்து வந்தாலும்.... ஓயாது அயராது உழைத்து வந்த தங்களின் உழைப்புக்கு கிடைத்த பலன் தான் இந்த பணம் என்று தங்கள் உழைப்பின் மீது வைத்திருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகிறார்கள் , அந்த தம்பதியர்.


Next Story

மேலும் செய்திகள்