பிரபல சீரியல் நடிகரின் மனைவி மரணம் - கோமாவிலேயே பிரிந்த உயிர்!

x

பிரபல சின்னத்திரை நடிகர் பரத்தின் மனைவி பிரியா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

பிரபல நடிகரான பரத் கல்யாண், தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வருகிறார்.

இவரது மனைவி பிரியா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மேலும் மோசமானதால் 7 மாதங்களாக கோமா நிலையில் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அதிகாலை 5 மணிக்கு பிரியா மரணமடைந்ததாக அவரது குடும்பத்தார் சோகத்தை பகிர்ந்துள்ளனர்.

பரத் கல்யாண் - பிரியா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பிரியாவின் மறைவு அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்