பிரபல ரவுடி பழிக்கு பழியாக வெட்டி படுகொலை...கொலையாளிகளை தீவிரமாக தேடும் போலீசார்

பிரபல ரவுடி பழிக்கு பழியாக வெட்டி படுகொலை...கொலையாளிகளை தீவிரமாக தேடும் போலீசார்
Published on

தூத்துக்குடியில் பழிக்கு பழியாக பிரபல ரவுடி ஒருவர், வீடு புகுந்து வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே சங்கரபேரி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் மீது 3 மூன்று கொலை வழக்குகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. இந்தநிலையில் கருப்பசாமியின் வீட்டுக்குள் புகுந்த 8 பேர் கும்பல், அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 2017-ம் ஆண்டு ஈஸ்வரன் என்பவர் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக, கருப்பசாமி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தப்பி சென்ற 8 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com