இறுதி நிமிடம் வரை ஆட்டத்தில் இருந்த பரபரப்பு... தனி ஒருவனாக போராடிய ஸ்டோக்ஸ் - ‘ஆட்டநாயகன்’ ஸ்மித் சொன்ன அந்த ஒரு வார்த்தை

x

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில், 416 ரன்கள் குவித்தது. ஸ்மித் சதமடித்தார். தொடர்ந்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில்,325 ரன்கள் எடுத்து. பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 279 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 371 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய இங்கிலாந்து அணியில், பென் டக்கெட் 83 ரன்கள் எடுத்தார். பாரிஸ்டோவ் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் ஆனதை தொடர்ந்து, அதுவரை பொறுமையாக ஆடிய ஸ்டோக்ஸ், அதிரடியாக விளாச தொடங்கினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்ட நிலையில், ஸ்டோக்ஸ் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து இங்கிலாந்து 327 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில், 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்