கோடிக்கணக்கில் கரன்சிகளை அள்ளிய அமலாக்கத்துறை - சிக்கிய முக்கிய புள்ளிகள்..? - பரபரப்பு தகவல்

x

கேரளாவில் ஹவாலா பரிவர்த்தனைகள் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 3 கோடி மதிப்பிலான, இந்திய மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 19 ஆம் தேதி, 14 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தநிலையில் ஹவாலா பணப்பரிவர்த்தனை மற்றும் சட்டவிரோத அந்நிய செலவாணி பரிவர்த்தனை ஆகியவை தொடர்பாக கிடைத்த தகவலின் அடைப்படையில், அச்சோதனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. மேலும் அந்த சோதனையில், 2.90 கோடி மதிப்பிலான இந்திய மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்துள்ளதாக கூறியுள்ள அமலாக்கத்துறை, ஹவாலா நெட்வொர்கின் முக்கிய புள்ளிகளாக சில நிறுவனங்கள் செயல்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளதாகவும் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்