நீதிமன்ற நுழைவு வாயில் மேலே ஏறி ஆட்டம் காட்டிய போதை ஆசாமி -பரபரப்பு சம்பவம்

விழுப்புரம் நீதிமன்ற வளாக நுழைவு வாயிலின் மீது தீடீரென ஏறிய மர்ம நபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்று மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பானது.

சுமார் 30 அடி உயரம் கொண்ட அந்த நுழைவு வாயிலின் மீது ஏறிய நபர் மது போதையில் இருந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அந்நபரை மீட்டனர்.

போலீசர் விசாரணை நடத்தையில், அவர் திருப்பாப்புலியூரை சேர்ந்தவர் அய்யனார் என்பது தெரியவந்தது.

மேலும், மயிலம் காவல்நிலைய ஆய்வாளர் தன்னிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து தொல்லை குடுப்பதாக குற்றஞ்சாட்டிய நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com