பஸ்ஸை நிறுத்தி டிரைவர் காலை பிடித்து இழுத்த வாகன ஓட்டி.. மண்டையிலேயே ரெண்டு போட போட்ட டிரைவர்

x

திருவண்ணாமலையில் அரசு பேருந்து ஓட்டுநரை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர், வாட்டர் பாட்டிலால் தாக்கினார். திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் முன்பு திடீரென இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்திய நபர், பேருந்து ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, வாட்டர் பாட்டிலால் தாக்கியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுநரும் பதிலுக்கு வாட்டர் பாட்டிலால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்