பாய்ந்தோடிய வெள்ளத்தில் சிக்கிய வாகனஓட்டி.. ஜஸ்ட் மிஸ்..பைக்கோட போச்சு..

x

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள மாவட்டூர் கிராமத்தில், சாலையில் வெள்ளம் ஆர்ப்பரித்து சென்ற நிலையில், அதை கடக்க முயன்றவரின் இருசக்கர வாகனம் அடித்து செல்லப்பட்டது. மாவட்டூர் கிராமத்தின் ஏரி நிரம்பி அப்பகுதியில் உள்ள சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இந்நிலையில் வாகன ஓட்டி ஒருவர், இருசக்கர வாகனத்துடன் சாலையை கடக்க முயன்றார். அப்போது நீரின் வேகத்தை தாங்க முடியாமல் வாகனம் அடித்து செல்லப்பட்டது. அருகில் இருந்துவர்கள் உதவியதால் வாகன ஓட்டி உயிர் தப்பிய நிலையில், அந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்