சிவகங்கையை உலுக்கிய இரட்டை கொலை..."55 நாட்களுக்கு பிறகு...." - போலீசார் அதிரடி நடவடிக்கை

x

சிவகங்கை அருகே தாய், மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் 55 நாட்களுக்கு பிறகு கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணன்கோட்டை கிராமத்தில் ஜனவரி மாதம் கனகம், இவரின் மகள் வேலுமதி, பேரன் பூவரசன் ஆகிய 3 பேர் மீதும் மர்ம கும்பல் கொடூரமாக தாக்குதல் நடத்தியது. இதில் கனகம், அவரது மகள் வேலுமதி ஆகியோர் உயிரிழந்த நிலையில் வீட்டில் இருந்த 46 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த இரட்டை கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த சூழலில் அதே ஊரை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் பெண்கள் 2 பேரையும் கொலை செய்தது உறுதியானது. இதில் ரமேஷ் குமார், விஜயகுமார், சுரேஷ் என்கிற வெள்ளைச்சாமி என 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் தங்க மோதிரங்கள், வெள்ளி பொருட்கள் சிலவற்றை மட்டும் கைப்பற்றிய நிலையில் இதன் பின்னணி குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்