மீண்டும் வருகிறது "டபுள் டக்கர் பஸ்"... அதிரடியாக பணிகளை தொடங்கிய அதிகாரிகள் - எந்த "ரூட்"லன்னு தெரியுமா? - வெளியான அப்டேட்

x

கடந்த 1997ம் ஆண்டு மாடி பேருந்துகள் என சொல்லப்படக்கூடிய டபுள் டக்கர் பேருந்துகள் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டன. மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்த பேருந்துகள், போக்குவரத்து நெரிசல், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2008ம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டன. இந்நிலையில் சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகளை இயக்குவது பற்றி போக்குவரத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. மின்சார கம்பிகள் அதிகம் இல்லாத, அண்ணா சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழித்தடத்தில் இவ்வகை பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சோதனை ஓட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்