திடீரென உடைந்து விழுந்த பள்ளிவேனின் கதவு - தவறிவிழுந்த 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

x

தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று, வழக்கம்போல், பழைய பெருங்களத்தூர், பாரதி நகர், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் இருந்த 31 மாணவர்களை, மினி வேனில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது.

பார்வதி நகர் என்ற பகுதியில் வேன் வந்தபோது, அதன் எமர்ஜென்சி கதவு உடைந்து, அருகில் இருந்த கார் மீது விழுந்தது. இதில் வேனில் பயணம் செய்த 7 வயது சிறுமி ரியோனா கீழே விழுந்தததில், 7 பற்கள் உடைந்து முகம், கை, கால்களில் படுகாயம் ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், சிறுமியை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், தப்பி ஓட முயன்ற வேன் ஓட்டுநரை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பான விசாரணையில், வாகனம் முறையான பராமரிப்பு இன்றி, துருப்பிடித்து இருந்ததன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்