குறுக்கே வந்த நாய்..டமார் என்று மரத்தில் மோதிய கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

x

சூலூர் அருகே மரத்தில் மோதிய கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம், கண்ணம்பாளையம் பகுதியில் ரமேஷ் என்பவர் தனது ஓட்டுநருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நாய் ஒன்று குறுக்கே வந்ததாக தெரிகிறது. இதனால் நிலைதடுமாறிய கார் அருகேயிருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் காரில் இருந்து இறங்கிய நிலையில், கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை அணைத்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்