நெடுஞ்சாலை துறை அதிகாரியைகடுமையாக பேசிய திமுக கவுன்சிலர் - தீயாய் பரவும் பரபரப்பு வீடியோ

x

தாம்பரத்தில் நெடுஞ்சாலை துறை அதிகாரியுடன் திமுக கவுன்சிலர் வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

சந்தோஷப்புரத்தில் இருந்து வேங்கைவாசல் செல்லும் சாலையில் மழைக் காலங்களில் வெள்ள நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது... இதனை சீர் செய்யும் வகையில் பாலம் கட்ட முடிவெடுத்து நெடுஞ்சாலை துறையால் நேற்று பள்ளம் எடுத்து வேலை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அதன் அருகில் கட்டுமான நிறுவத்தினர் பணிக்காக வைத்திருந்த மணலை நெடுஞ்சாலை துறையினர் லாரி மூலம் அப்புறப்படுத்தியுள்ளனர். இதனை கட்டுமான நிறுவனத்தினர் கண்டித்து வாக்குவாதம் செய்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் சுரேஷ் கட்டுமான நிறுவனத்திற்கு ஆதரவாக நெடுஞ்சாலை துறை அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து கட்டுமான நிறுவனத்தினர் போலீசில் புகார் செய்ததை அடுத்து, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்... இந்நிலையில், இருவருக்கும் நடந்த வாக்குவாதம் தற்போது இணையத்தில் அதிவேகமாகப் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்