குடும்பத்தில் அடிக்கடி வெடித்த தகராறு...சடலமான மனைவி, தலைமறைவான கணவன்...

x

கிருஷ்ணகிரி - சின்னேப்பள்ளி

குடும்பத்தில் அடிக்கடி வெடித்த தகராறு...

சடலமான மனைவி, தலைமறைவான கணவன்...

மனைவியை வெட்டி கொன்ற கணவன்..?

பணம் கேட்டு தராததால் நடந்த பயங்கரம்..?

கணவன் மனைவி ரெண்டு பேரு மட்டுமே இருந்த வீட்டுல வெட்டு காயங்களோடு மனைவி சடலமா கிடந்திருக்காங்க. கணவர காணல...

யார் இந்த கொலைய செஞ்சது..? அவங்களோட நோக்கம் என்னவா இருக்கும்?


அவ்வளவு அழுகையும், ஒப்பாரியுமாக அந்த ஊரை அதற்கு முன் அந்த பகுதிவாசிகளே பார்த்தது கிடையாது.

சோகமும் மிரட்சியும் கூடியிருந்தவர்கள் கண்ணில் பளிச்சிட்டது.

சம்பவ இடத்திலிருந்த போலீசார், அழுது புரண்டு கிடந்தவர்களை கண்டுகொள்ளாமல் அவர்கள் வேலையில் இறங்கினார்கள்.

அந்த வீட்டினுள் இருந்து போர்வையால் மூடியபடி சடலம் கொண்டு வரப்பட்டது. ஒட்டுமொத்த சோகமும் பீறிட சுற்றியிருந்த உறவினர்கள் அழுத அழுகை அனைவரையும் உலுக்கி போட்டது.



சடலமாக மீட்கப்பட்டவர் கவுரி. 41 வயதான இருவருக்கும் சின்னத்துரை என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் இரண்டு பெண் என மொத்தம் 3 பிள்ளைகள். இரண்டு பெண்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகன் ராணுவத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். இதனால் கணவன் மனைவி மட்டும் தனிமையில் வசித்திருக்கிறார்கள்.

சின்னத்துரை - கவுரி தம்பதியின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை. கட்டிட மேஸ்திரியாக வேலைபார்த்து வந்த சின்னத்துரை கடுமையாக உழைத்து குடும்ப கடமைகளை நிறைவேற்றியிருக்கிறார். தேன்கனிக்கோட்டையில் அவருக்கு நிலம்புலம் இருந்திருக்கிறது.

டவுனுக்கு குடிபெயர நினைத்த சின்னதுரை, ஊரில் உள்ள சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு சின்னேப்பள்ளியில் ஒரு விவசாய நிலத்தை வாங்கியிருக்கிறார். 6 மாதத்திற்கு முன்பு அம்மன் நகரில் உள்ள வீடு ஒன்றை லீசுக்கு எடுத்து அங்கேயே வசிக்க தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த சூழலில் தான் கவுரி மட்டும் வீட்டில் வெட்டு காயங்களோடு சடலமாக கிடந்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையில் இறங்கிய போது தான் சின்னத்துரை தலைமறைவாகி இருக்கும் விஷயம் தெரியவந்திருக்கிறது. ஒட்டுமொத்த சந்தேகமும் அவர் மீது திரும்பியிருக்கிறது.

கவுரியை கொன்று விட்டு சின்னத்துரை தலைமறைவாகியிருக்கலாம் என்பது போலீசாரின் யூகம். நடந்த கொலைக்கு பணம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

தேன்கனிக்கோட்டையில் நிலத்தை விற்ற சின்னத்துரை, அவர் பெயரிலும் மனைவி பெயரிலும் பணத்தை டெபாசிட் செய்திருக்கிறார். கடந்த சில நாட்களாகவே கவுரி பெயரிலிருந்த 20 லட்சம் ரூபாய் பணத்தை கேட்டு சண்டையிட்டு வந்திருக்கிறார் சின்னத்துரை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு அதிகரிக்கவே, கோபித்து கொண்டு ஒரு வாரத்திற்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்றிருக்கிறார் கவுரி.

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கவுரியை சமாதானம் செய்து, வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் சின்னத்துரை. அதன் பிறகும் இருவருக்கும் தகராறு தொடர்ந்திருக்கிறது. அதன் தொடர்சியாக தான் கவுரி கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.

தலைமறைவாக இருக்கும் சின்னத்துரையை கைது செய்தால் மட்டுமே, கவுரியை கொன்றது யார்? கொலைக்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கு உண்மையான விடை கிடைக்கும்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சின்னத்துரையை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். முழு விசாரணைக்கு பிறகே கவுரி கொலையின் மர்மம் விலகும்.


Next Story

மேலும் செய்திகள்