நாட்டை உலுக்கிய டெல்லி சம்பவம்... தோழி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் - மேலும் சிக்கிய 2 பேர்

x

கஞ்சவாலாவில் காரில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், பெண் மீது கார் மோதிய இடமும், உடல் மீட்கப்பட்ட இடத்திற்கு 12 கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலையில், அவ்வளவு தூரம் பெண் எப்படி இழுத்து வரப்பட்டார் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பிருப்பதும், அவர்களுக்கும் கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கும் தொடர்பிருப்பதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

மேலும், விபத்தன்று காரை தீபக் என்பவர் ஓட்டி சென்றதாக கூறப்ப்பட நிலையில், காரை இயக்கியது அமித் தான் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த அஞ்சலியின் தோழி நிதியின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ள போலீசார், 18 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்