திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்ட நாள்.. 50 ஆண்டுகளாக தொடரும் கடும் போட்டி..!

x

திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்ட நாள்.. 50 ஆண்டுகளாக தொடரும் கடும் போட்டி..தமிழக அரசியலில் திருப்பு முனையான நிகழ்வு..

50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் திமுகவில் இருந்து எம்ஜிஆர் இடை நீக்கம் செய்யப்பட்டார். தமிழக அரசியலை இன்று வரை பாதிக்கும் மிக முக்கிய திருப்பு முனை இது.

1953இல் திமுகவில் இணைந்த எம்ஜிஆர், அறிஞர் அண்ணாவின் தீவிர விசுவாசியாகவும், திமுகவின் பிரச்சார பீரங்கியாகவும் உருவெடுத்தார். 1969இல் அண்ணாவின் மறைவிற்கு பிறகு, திமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட முக்கிய திமுக தலைவர்களுடன் முரண்பாடுகள் அதிகரித்ததால், 1972இல் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 1972 அக்டோபர் 18இல் அதிமுக கட்சியை தொடங்கி, 1977இல் ஆட்சியை பிடித்தார். அதிமுக, திமுக இடையே கடந்த 50 ஆண்டுகளாக தொடரும் கடும் போட்டிகளினால், காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் எதுவும் இன்று வரை தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியவில்லை. தமிழக அரசியலின் போக்கை முற்றிலும் மாற்றியமைத்த நிகழ்வான, எம்ஜிஆர் திமுகாவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட தினம் 1972, அக்டோபர் 11.


Next Story

மேலும் செய்திகள்