உக்ரைனில் 33 ஆயிரம் யூதர்களை ஹிட்லரின் நாசி ராணுவம் படுகொலை செய்த தினம்

x

1933ல் ஜெர்மனியில் ஹிட்லர் தலைமையில் நாசிகள் அதிகாரத்தை கைபற்றிய பின், யூத இன மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்தன. ஜெர்மனியின் பிரச்சனை கள், தோல்விகள் அனைத்திற்கும் யூத இன மக்கள் தான் காராணம் என்று நாசி அரசு அறிவித்து, அவர்களின் உரிமை கள் அனைத்தையும் நசுக்கியது.

இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பின், ஜெர்மனி கைபற்றிய பகுதிகளில் இருந்து யூதர்கள் அனைவரும் படிப்படியாக கொல்லப்பட்டனர். 1941ல் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்த ஜெர்மனி, அதன் ஒரு அங்கமாக இருந்த உக்ரைனை கைப்பற்றியது.

உக்ரைன் தலைநகர் கீவில் இருந்த யூத இன மக்கள் அனைவரையும் கூண்டோடு கொன்றழிக்க, ஜெர்மன் ராணுவ தளபதிகள் முடிவு செய்தனர்.

நகரில் இருந்த யூத இன மக்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் நகருக்கு வெளியே இருந்த பாபியர் என்ற மலைப் பகுதிக்கு நடத்தி சென்று, சுட்டுக் கொன்றனர்.

33,771 யூத இன ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் கொல்லப்பட்டதாக தரவுகள் கூறுகின்றன.

நாசி ராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த ஐரோப்பிய நாடுகளில் மொத்தம் 60 லட்சம் யூத இன மக்கள், வதை முகாம்களில் அடைக்கப்பட்டு, விஷ வாயு செலுத்தப்பட்டு

கொல்லப்பட்டனர்.

அன்று உலகெங்கும் இருந்த யூத இன மக்களின் மொத்த மக்கள் தொகையில் இது மூன்றில் இரண்டு பங்காகும். உலக வரலாற்றில் நடந்த இன அழிப்புகளில் இது தான் மிக பெரியதாகும்.

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 33,000 யூதர்களை நாசி ராணுவம் படுகொலை செய்த தினம், 1941 செப்டம்பர் 29.


Next Story

மேலும் செய்திகள்