கல்வி சுற்றுலா சென்ற மறுநாளே சோகத்தில் திரும்பிய மாணவ மாணவிகள்... அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை

x

மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் அனுமதி இன்றி புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது குறித்து விளக்கமளிக்க தலைமை ஆசிரியர் உட்பட 7 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

The day after the educational tour, the students who returned in sadness... Action taken by the authoritiesகரு தெற்கு தெரு அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 150 மாணவ மாணவிகள் கல்வித்துறை உயர் அதிகாரிகளின் அனுமதி இன்றி வேளாங்கண்ணிக்கு கல்வி சுற்றுலா நேற்று அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மாணவ மாணவிகள் மீண்டும் திரும்பி அழைத்து வரப்பட்டனர். புதுக்கோட்டை அரசுப்பள்ளி மாணவிகள் கரூர் மாயனூர் காவேரி அணையில் சிக்கி உயிரிழந்த விவகாரமே இன்னும் முடிவடையாத நிலையில், எந்த விதமான முன் அனுமதியும் இன்றி கரு தெற்கு தெரு அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களை எவ்வாறு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லலாம் என கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டு பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 7 ஆசிரியர்களுக்கு அறந்தாங்கி கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்